SDAT அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கராத்தே பயிற்சியாளர்கள் கோரிக்கை
அயுஷ் 24 நியூஸ்
கராத்தே விளையாட்டிற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், தமிழக அரசு நடத்தும் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கராத்தேவை சேர்க்க வேண்டும் என கராத்தே பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கராத்தே விளையாட்டிற்கு அங்கீகாரம் இருந்தும், முதல்வர் கோப்பை போட்டிகளில் கராத்தேவை சேர்ப்பது தொடர்பாக SDAT (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்) அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பயிற்சியாளர்கள் குற்றம்சாட்டினர். இதனால் தமிழக அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
கராத்தேவை முதல்வர் கோப்பை போட்டியில் சேர்க்காமல் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, உடனடியாக கராத்தே விளையாட்டை போட்டியில் சேர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கராத்தே பயிற்சியாளர்கள் சார்பில் ‘கராத்தே காவலன்’ தனசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கராத்தே விளையாட்டிற்கு தமிழக அரசு உரிய அங்கீகாரமும் ஊக்கமும் அளித்து, வீரர்-வீராங்கனைகளுக்கு போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.










Leave a Reply